நாகர்கோவில் – தோட்டியோடு 4 வழிச்சாலையை ஒட்டி உள்ள குதிரைபாஞ்சான் குளத்தில் நேற்று ஆண் சடலம் ஒன்று அரை நிர்வாண நிலையில் கிடந்தது. அந்த ஆண் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். உடல் கவிழ்ந்த நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடையாளம் தெரிந்தது
தொடர்ந்து நடந்த விசாரணையில் குளத்தில் இறந்து கிடந்தவர் களியக்காவிளை மீனச்சல் மேலதெற்றிவிளை பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜ் மகன் திலீப் டேனியல் (20) என தெரிய வந்தது. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 23ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக களியக்காவிளை காவல் நிலையத்தில் கிறுஸ்தராஜ் கடந்த 24ம் தேதி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று காலையில் தோட்டியோடு குதிரைபாய்ந்தான் குளத்தில் திலீப் டேனியல் பிணமாக மிதந்துள்ளார்.
நமது செய்தியாளர் தீ.தமிழரசன் நிருபர் திருப்பூர்







