முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/ஆக்சிடென்ட் நியூஸ்/குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை

குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை

✍️ Ananda Kumar⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

‎நாகர்கோவில் – தோட்டியோடு 4 வழிச்சாலையை ஒட்டி உள்ள குதிரைபாஞ்சான் குளத்தில் நேற்று ஆண் சடலம் ஒன்று அரை நிர்வாண நிலையில் கிடந்தது. அந்த ஆண் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். உடல் கவிழ்ந்த நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

‎அடையாளம் தெரிந்தது

‎தொடர்ந்து நடந்த விசாரணையில் குளத்தில் இறந்து கிடந்தவர் களியக்காவிளை மீனச்சல் மேலதெற்றிவிளை பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜ் மகன் திலீப் டேனியல் (20) என தெரிய வந்தது. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 23ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக களியக்காவிளை காவல் நிலையத்தில் கிறுஸ்தராஜ் கடந்த 24ம் தேதி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று காலையில் தோட்டியோடு குதிரைபாய்ந்தான் குளத்தில் திலீப் டேனியல் பிணமாக மிதந்துள்ளார்.
நமது செய்தியாளர் தீ.தமிழரசன் நிருபர் திருப்பூர்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
ஆக்சிடென்ட் நியூஸ்

*நேபாள வெள்ளம்: 150-க்கும் மேற்பட்டோர் பலி; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயம்!*

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் சேற்றுச்சரிவில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயம். மாயமானவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள், 54 பேர் அமெரிக்கர்கள், 34 பேர் ஆஸ்திரேலியர்கள், 33 பேர் பிரிட்டன் நாட்டவர்கள் என நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நேபாளர்களும் மாயமாகியுள்ளனர்; பாதிக்கப்பட்ட பகுதி யாத்திரிகர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகளிடையே பிரபலமானது.Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →