முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/அரசியல் களம்/*அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்.*
அரசியல் களம்

*அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்.*

✍️ Ananda Kumar⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
*அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் –  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்.*

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தினமும் தங்களது கைவசம் கொண்டு வரும் சொந்த ரொக்கப் “Personal Cash Register” என்ற பிரத்யேகப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த ரொக்கப் பதிவேடானது, தினமும் வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்து அலுவலகத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

அலுவலகத் தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை (Bi-monthly) இந்த ரொக்கப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

இந்தப் பதிவேட்டைச் சரியாகப் பராமரிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர் மற்றும் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்கும் பணியாளர் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்-கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் சுற்றறிக்கை.

Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
*நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*
அரசியல் களம்

*நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*

சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்.தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்-110 விதியின் கீழ்… Continue reading *நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*

*ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.*
அரசியல் களம்

*ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.*

சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கையும் நிராகரிப்பு.இவிஎம் இயந்திரங்களை சோதனை செய்ததன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தலைமை நீதிபதி அமர்வு தெரிவிப்பு. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக.. சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம்*
அரசியல் களம்

*சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக.. சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம்*

தமிழை சென்னை ஐகோர்ட்டின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும்.ஐகோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்பட அம்சங்களுடன் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிகிறார். துணை ஆசிரியர் S.கண்ணன்

*மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.*
அரசியல் களம்

*மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.*

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →