முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/இந்தியா/சமையல் சிம்மாசனம் சிறுதானியம் – சுவையும் ஆரோக்கியமும்:
இந்தியா

சமையல் சிம்மாசனம் சிறுதானியம் – சுவையும் ஆரோக்கியமும்:

✍️ Ananda Kumar⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவின் முக்கியமான பகுதியாக இருந்தவை. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவற்றை உணவில் சேர்ப்பது பல்வேறு ஊட்டச்சத்துகளைப் பெற உதவும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்வது சமச்சீர் உணவின் ஒரு பகுதியாகும்.

🍽️ இன்றைய சமையல் – கம்பு காய்கறி அடை

தேவையான பொருட்கள்

  • கம்பு மாவு – 1 கப்
  • வெங்காயம் – 1
  • கேரட் – 1
  • பீன்ஸ் – சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 1–2
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கம்பு மாவுடன் நறுக்கிய காய்கறிகள், கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு கலக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடையாகத் தட்டி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்றாக வேகவிடவும். சூடாக சட்னியுடன் பரிமாறலாம்.

பாரம்பரிய சுவை – கம்பு கூழ்

கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கட்டியில்லாமல் சமைக்கவும். நன்றாக வெந்ததும் ஆறவைத்து தேவைக்கேற்ப மோர் அல்லது தயிருடன் கலந்து, சிறிது உப்பு சேர்த்துப் பரிமாறலாம்.

ருசி ரேவதியின் குறிப்பு:
கூழில் சேர்க்கும் உப்பு மற்றும் புளிப்பு அளவை உங்கள் சுவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

பாட்டியின் சமையல் ரகசியம்

அடை மென்மையாக வேண்டுமா?
மாவை மிகவும் கெட்டியாகக் கலக்காமல், சிறிது தளர்வான பதத்தில் வைத்தால் அடையை எளிதாகத் தட்டி சமைக்க முடியும். காய்கறிகளைப் பொடியாக நறுக்கினால் அவையும் நன்றாக வேகும்.

உணவை வீணாக்காதோம்!

மீதமான சாதத்தை வீணாக்காமல், அதில் காய்கறிகள் சேர்த்து காய்கறி சாதம், தயிர் சேர்த்து தயிர் சாதம், அல்லது மசாலா சேர்த்து எளிய கலவை சாதம் என மாற்றிப் பயன்படுத்தலாம்.

உணவை மதிப்பது என்பது உணவை சமைப்பவரின் உழைப்பையும் மதிப்பதாகும்.

ருசி ரேவதியின் சுவைச் சிந்தனை

“சமையலில் சுவை முக்கியம்; உணவில் சத்து முக்கியம்; உணவை மதிப்பது அதைவிட முக்கியம்!”

இந்த மாதம் ஒரு சிறுதானிய உணவை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
சிறிய மாற்றம்… நல்ல உணவுப் பழக்கத்திற்கான அழகான தொடக்கம்!

நமது துணை ஆசிரியர்

ஆ. கல்பனா

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
*டாஸ்மாக்கில் பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு – டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில்  அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு.*
அரசியல் களம்

*டாஸ்மாக்கில் பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு – டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு.*

டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு.டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20,000.டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஊதியம்.டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஊதியம்.டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஊதியம்-டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு. இணை ஆசிரியர் இ.விஜயகுமார்

பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு – முதல்வர் விஜய்.
அரசியல் களம்

பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு – முதல்வர் விஜய்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.44ஆக வழங்கப்படும்.கறவை மாடுகளுக்கான இடுபொருட்களின் விலை உயர்வால் பால் கொள்முதல் விலை உயர்வு.பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சத்துக்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்-சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்.கடந்த சில நாள் முன்பு ரூ.38ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.3 உயர்த்தி அறிவிப்பு. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

புதுச்சேரியில் கொலை
இந்தியா

புதுச்சேரியில் கொலை

நள்ளிரவு கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்….** *இவர் மீது பிரபல ரவுடி கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது…..*நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
இந்தியா

*30 நாட்கள் விசா இல்லா பயணம் – உஸ்பெகிஸ்தான் அதிபர் அறிவிப்பு.*

இந்திய குடிமக்களுக்கு 30 நாட்கள் விசா இல்லாமல் உஸ்பெகிஸ்தான் செல்லும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் அரசு முறைப் பயணத்தின் போது, இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்த அறிவிப்பு வெளியானது.இந்த நடவடிக்கை மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகள் மேலும் அதிகரிக்கும் என உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் தெரிவித்துள்ளார். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →